பிரபல நடிகை ஆர்லீன் சோர்கின் காலமானார்..

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (14:48 IST)
பிரபல  ஹாலிவுட் நடிகை ஆர்லீன் சோர்கின்   நரம்பியல்  நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  காலமானார்.
 

பிரபல  ஹாலிவுட் நடிகை ஆர்லீன் சோர்கின்(67).   இவரது கணவர் தயாரிப்பாளாரும் எழுத்தாளாருமான கிரிஸ்டோபர் லாயிட். இத்தம்பதியர்க்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நடிகை ஆர்லீன் சோர்க்கின், புகழ்பெற்ற காமிக்ஸ் தொடரில் ஹார்லி குயின் என்ற கேரக்டருக்கு குரல் கொடுத்தவர் ஆவார். சினிமாவில் மட்டுமின்றி, பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் வசித்து வந்த ஆர்லீன் சோர்கினுக்கு  நரம்பியல்  நோய் பாதிக்கப்பட்டு இருந்ததால் இதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்ரு வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்  கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி  காலமானார்.

அவரது மறைவுக்கு ஹாலிவுட் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்