காமெடி நடிகர்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுபவர் வடிவேலு. யாரை கலாய்க்க வேண்டுமானாலும் ரசிகர்களுக்கு முதலில் அவருடைய மீம்ஸ் மற்றும் அவரது வசனங்கள் தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது மகன் சுப்ரமணிக்கு திருமணம் செய்து வைத்தார். அவரது சொந்த ஊரில் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது.
வடிவேலுவின் மருமகள் சிவகங்கை மாவட்ட திருப்புவனம் ஊரைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா மரவேலை செய்யும் ஒரு கூலி தொழிலாளி என்றும் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது. தன் மகன் மூலம் ஒரு பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்த நடிகர் வடிவேலுவை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இச்செய்தி சமூக வலைதளங்களில் வைராலாக பரவி வருகிறது.