இந்த வாரம் வெளியேறுவது அபிராமியா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (21:00 IST)
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முகின், லாஸ்லியா, கவின், மதுமிதா மற்றும் அபிராமி ஆகிய ஐந்து பேர்கள் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது வரை குறைந்த அளவு போட்டு வாங்கியவர் அபிராமி என்ற தகவல் வந்துள்ளது. அவருக்கு 7.33 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், முதலிடத்தில் உள்ள முகினுக்கு 29.3 6 சதவீதம் கிடைத்துள்ளதாகவும், தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
எனவே வாக்களிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் அபிராமி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இருப்பினும் அபிராமியை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றாமல், சீக்ரெட் அறையில் வைத்திருக்க பிக்பாஸ் முடிவு செய்து இருப்பதாகவும், அதுகுறித்த அறிவிப்பு வரும் சனிக்கிழமை வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
அபிராமி ஒரு சில நாட்கள் சீக்ரெட் அறையில் இருந்த பின்னர், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தால் முகின் - அபிராமி பிரச்சனை மீண்டும் தொடருமா அல்லது முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
 
 லாஸ்லியா மற்றும் கவின் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட சம அளவில் வாக்குகளைப் பெற்றுள்ளனர். மதுமிதா குறைந்த அளவு வாக்குகளை பெற்று இருந்தாலும் அபிராமிக்கும் மதுமிதாவுக்கும் இடையில் உள்ள வாக்குகள் வித்தியாசம் சற்று அதிகமாக இருப்பதால் இந்தவாரம் அபிராமியே வெளியேற அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்