பிரபல நடிகரின் மகளை மணக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்!

செவ்வாய், 28 நவம்பர் 2023 (08:07 IST)
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இதையடுத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில் அவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரபுவின் மகளைதான் அவர் திருமணம் செய்ய உள்ளதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வைரல் ஆகி வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்