என் வாழ்க்கையின் விலைமதிப்பில்லாத தருணம் இது… அஜித் பட இயக்குனர் ஆதிக் நெகிழ்ச்சி!

vinoth

வெள்ளி, 15 மார்ச் 2024 (07:27 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள ஆதிக் “ஒவ்வொரு வாழ்க்கையிலும் விலைமதிப்பில்லாத சில தருணங்கள் அமையும். என்னுடைய எதிர்பார்ப்புகளையும் தாண்டிய ஒரு தருணமாக இது உள்ளது. அஜித் சாருடன் இணைந்து பணியாற்றுவது என்னுடைய நீண்ட நாள் கனவு. அவருடன் இணைந்து பணியாற்றுவது என்பது பெரும் உணர்ச்சிபூர்வமாக தருணம். என்னுடைய தயாரிப்பாளர்களான நவீன் எர்ரேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்