‘தளபதி 64’ படத்தின் கதை விவாதம் மற்றும் தளபதி விஜய்யின் கெட்டப் உள்ளிட்ட ஆலோசனை குழுவில் லோகேஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவ்வ் இயக்குனர் ரத்தினகுமார் இணைந்துள்ளராம். ரத்னகுமார் மட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் நெருங்கிய திரையுலக நண்பளும் இந்த படத்தின் ஆலோசனைக்குழுவில் இணைந்துள்ளதாக தெரிகிறது. எனவே ’தளபதி 64’ படத்தில் விஜய்யின் கெட்டப் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’ஆடை’ திரைப்படத்தை அடுத்து, அடுத்த படத்திற்கான இயக்குனர் ரத்னகுமார் தயாராகி வருகிறார் என்பதும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ரத்னகுமாரின் அடுத்த படத்திலும் அமலாபால் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்