சிம்புவின் 'AAA' அமெரிக்க காட்சிகள் திடீர் ரத்து

வெள்ளி, 23 ஜூன் 2017 (05:31 IST)
சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இருப்பினும் நேற்று அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் பிரிமியர் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



 


இந்த பிரிமியர் காட்சிகள் நேற்று திடீரென ரத்து செய்துவிட்டதாகவும், இந்த காட்சிக்காக முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள சிம்பு ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.பிரிமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை

இருப்பினும் இன்றைய காட்சிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்பட ஒருசில முக்கிய நகரங்களில் இந்த படத்திற்கு அதிகாலை காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்