3-வது மனைவியை பழிவாங்க சினிமா எடுத்த பிரபல நடிகர்?

வெள்ளி, 12 மே 2023 (19:25 IST)
மறைந்த நடிகை விஜய  நிர்மலாவின் மகன் மற்றும் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்  நரேஷ். இவர் ஏற்கனவே 3 முறை திருமணமானவர்.

63 வயதனா நரேஷ்   சமீபத்தில், கன்னட நடிகை பவித்ராவை திருமணம் செய்துகொண்டதாக ஒரு புகைப்படம் வைரலானது. ஆனால், இது ஒரு படத்தில் இடம்பெற்ற காட்சி என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு  நடிகர் நரேஷ் மற்றும் பவித்ரா இருவரும் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது, நரேஷின் 3 வது மனைவி ரம்யா பவித்ராவை செருப்பால் அடிக்க முயன்றார். இது சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,   நடிகர் நரேஷ் மல்லி பெல்லி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ  இயக்கியுள்ளார்.

இப்படம் வரும் மே 2 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்  நரேஷின்  நிஜ வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்பட்டது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இப்படம் மூலம் உங்கள் 3 வது மனைவியை பழிவாங்க விரும்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு,  சினிமா என்பது பொழுதுபோக்கு, ரூ.15 கோடி செலவு செய்து பழிவாங்க முயற்சிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்