96 ரிலீஸ் தேதி அறிவிப்பு...

புதன், 12 செப்டம்பர் 2018 (14:12 IST)
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகவிருக்கும் 96 படம் வரும் அக்டோபர் 4ம்  தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
விஜய் சேதுபதி, திரிஷா முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் '96'. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பசங்க உள்ளிட்டபடங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
 
1996ல் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது இந்த காதல் படம். பள்ளி பருவத்தில் காதல் கொண்ட இருவர் சில சூழ்நிலையால் பிரிந்து விடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சந்திக்கும்பொழுது என்ன நடக்கிறது என்பதை பற்றிய கதைதான் இப்படம்.
 
படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அன்றிலிருந்து படத்தின் ரிலீஸ் குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது.  
 
இப்படத்தை அக்டோபர் 4ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்