புர்ஜ் கலிபாவில் திரையிடப்பட்ட 83 பட காட்சிகள்!

திங்கள், 20 டிசம்பர் 2021 (16:05 IST)
இந்திய அணி முதல் முதலாக உலகக்கோப்பையை வென்றதை இப்போது திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக உலக கோப்பையை கடந்த 1983-ஆம் ஆண்டு வென்ற நிலையில் இந்த நிகழ்வை மையமாக வைத்து படம் ஒன்று உருவாகி உள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த திரைப்படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடித்து வருகிறார். மேலும் தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்து வருகிறார்கள் என்பதும் தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபீர் கான் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் இந்த படத்தின் சில காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்