அட்லீ படத்தில் எனது ஃபேவரைட் கலைஞர்கள் - கஸ்தூரி மகிழ்ச்சி

புதன், 21 ஜூலை 2021 (18:48 IST)
அட்லீ இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ள படத்தின் முக்கிய அப்டேட் இன்று பக்ரீத் தினத்தன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் அட்லீ. இவர் இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதையடுத்து, பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் அட்லீ கதை சொல்லி உள்ளதாகவும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஷாருக்கான் - அட்லீ இணையும் அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.

இந் நிலையில் இன்று பக்ரீத் தினத்தன்று இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் , ஏ.ஆர்.ரஹ்மான், நயன் தாரா ஆகியோர் மூவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதற்கு நடிகை கஸ்தூரி, இவர்கள் மூவரும் எனது ஃபேவரைட் இவர்கள் இணைந்து ஒரு படத்தில் நடிக்கும் படம் பிளாக்பஸ்ட் ஆகும் என வாழ்த்தியுள்ளது.
மேலும், தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற படத்தில் ஷாருக்கான் நடித்து வருவதால் இப்படப்பிடிப்பு முடிந்த பின் அட்லி – ஷாருக்கான் இணையும் பட ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாருக்கான் 2 கெட்டப்பில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

Bakrid Breaking news Blockbustercombo #ShahRukhKhan #Nayanthara #Atlee #arrahman All my favs in one movie @Atlee_dir @iamsrk @arrahman pic.twitter.com/65opGL5IQr

— Kasturi Shankar (@KasthuriShankar) July 21, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்