அந்த வரிசையில் ‘யுனிசெல்’ என்ற நிறுவனத்தின் பெயரைத் திரைப்படத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே, ‘புற்று நோய்,’ ‘கருச்சிதைவு’, ‘ஆண்மைக் குறைவு’, ‘லஞ்சம்’, ‘45 வருடம்’ ஆகிய வசனங்களை நீக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மேலும் படத்திற்கு பக்கபலமாக அமைந்த ‘9’ என்ற வார்த்தையை நீக்கச் சொல்லியும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ‘9’ என்ற எண்ணை, ‘வார்த்தை’ என சென்சார் குழு குறிப்பிட்டிருப்பதன் காரணம் அது ஒரு தனி நபரைக் குறிப்பதாகவே இருக்க வேண்டும்.