எ ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன் பேனரின் கீழ் கல்யாண் சுப்ரமணியன் தயாரித்துள்ள ஸ்நேக்ஸ் & லேடர்ஸ் சீரிஸை, கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் உருவாக்கத்தில், அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்தத் தொடரில் நவீன் சந்திராவுடன் நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரிந்தா, ஸ்ரீஜித் ரவி, எம்.எஸ். சம்ரித், எஸ். சூர்யா ராகவேஷ்வர், எஸ். சூர்யகுமார், தருண் யுவராஜ் மற்றும் சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 18 முதல், இந்த சீரிஸ், பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாகத் திரையிடப்பட உள்ளது, தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு, இந்தியாவெங்கும் உள்ள பார்வையாளர்கள் அணுகும் வகையில் திரையிடப்படுகிறது என்றார்.