வெற்றிமாறன் ஹீரோ நகுல்? - ஒரு காமெடி தர்ப்பார்

திங்கள், 2 ஏப்ரல் 2012 (20:49 IST)
வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் நகுல் நடிக்கலாம் என்ற அதிர்ச்சி செய்தியை இரண்டு தினங்கள் முன்பு சில ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். எளிதில் ஜீரணமாகாத இந்த செய்தி எப்படி உருவானது?

வெற்றிமாறன் நகுல் நடிக்கும் நான் ராஜாவாகப் போகிறேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் இயக்கும் இந்தப் படத்துக்கு வெற்றிமாறன் வசனம் எழுதியுள்ளார். இந்த நட்பின் பொருட்டு படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார் வெற்றிமாறன். படத்தில் இவர் நகுலை இயக்குவது போல் ஒரு காட்சி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை வைத்து, வெற்றிமாறன் வட சென்னையில் நகுலை நடிக்க வைக்கிறார். அதற்கு ட்ரையல் பார்க்கவே நான் ராஜாவாகப் போகிறேன் படப்பிடிப்புக்கு வந்தார் என கிளப்பிவிட்டனர். மற்றபடி வெற்றிமாறன் ரொம்ப ‌ரிலாக்ஸாக ஸ்கி‌ரிப்டை டெவலப் செய்து வருகிறார். சிம்பு ஃப்‌‌ரீயானதும் படப்பிடிப்பு தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்