விஷயம் வெளியே தெரியக்கூடாது - ஒரு மோசடி படம்

புதன், 11 ஜூன் 2014 (15:55 IST)
படத்தின் கதை சமூகத்துக்கு ஏதாவது ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்பதில் பழைய சினிமாக்காரர்கள் உறுதியாக இருந்தனர். குறைந்தபட்சம் எதிர்மறையாக எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். இன்று காலம் மாறிவிட்டது. எதிர்மறை விஷயங்கள்தான் ரசிகர்களை கொக்கிப் போட்டு இழுக்கிறது. அவர்களின் ரசனைக்கேற்ற படம்தான், விஷயம் வெளியே தெரியக்கூடாது.
 
உழைத்துப் பிழைத்தது ஒருகாலம். உழைக்காமல் மோசடி செய்து பிழைப்பதை கௌரவமாகக் கருதுவது இந்தக் காலம். மோசடி செய்து சம்பாதிக்க நினைக்கும் ஐந்து நபர்களைப் பற்றிய கதைதான் இந்தப் படம். கொஞ்சம் மூளையை உபயோகித்து மோசடியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே இந்த ஐவரின் கொள்கை. முக்கியமான இன்னொரு கொள்கை. இந்த மோசடி எக்காரணம் கொண்டும் வெளியே தெரியக் கூடாது. அதையே படத்தின் பெயராக்கியிருக்கிறார் இயக்குனர் ராகவேந்திரா.
 
சென்ட்ராயன், மூடர்கூடம் குபேரன், நாடோடிகள் ரங்கன், ஆர்யன், அம்பாசங்கர் ஆகிய ஐந்து பேரும் மோசடி இளைஞர்களாக நடிக்கின்றனர். படத்தின் கதை நெடுஞ்சாலைகளில் நடப்பதாக திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. 
 
எண்பது சதவீத படப்பிடிப்பை ஏற்கனவே முடித்தவர்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்