வாயை மூடி பேசவும் படத்துக்கு யு

புதன், 23 ஏப்ரல் 2014 (11:28 IST)
பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் வாயை மூடி பேசவும் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
காதலில் சொதப்புவது எப்படி படத்தின் வெற்றிக்குப் பிறகு நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான் இருவரையும் வைத்து வாயை மூடி பேசவும் படத்தை பாலாஜி மோகன் எடுத்துள்ளார். 
 
இருவரும் மலையாளத்தின் இளம் முன்னணி நட்சத்திரங்கள் என்பதால் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் இரு மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது. 52 தினங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார் பாலாஜி மோகன்.
 
வரும் 25 இப்படம் திரைக்கு வருகிறது. அதனை முன்னிட்டு படம் தணிக்கைக்குழுவுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்