வதந்திகளை நம்ப வேண்டாம் - சரத்குமார் வேண்டுகோள்

புதன், 3 ஏப்ரல் 2013 (20:32 IST)
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஹிட் படம். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தார் சரத்குமார். ஆனால் அதை குலைப்பதுதானே நம்மவர்களின் வேலை.

சென்னையில் ஒரு நாள் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஊடகங்களில் பூடகமாக உலவும் அந்தச் செய்தியை போட்டுடைத்தார் ஒருவர்.
FILE

படத்தின் டைட்டிலில் சன் பிக்சர்ஸுக்கு நன்றி தெரிவித்ததால் படத்துக்கு வரி விலக்கு கிடைக்கலையாமே?

சரத்குமாரின் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி, குழப்பம். இந்த நியூஸ் அவருக்கே தெரியாதா? இல்லை இப்படியெல்லாம்கூட எழுதுவாங்களா என்ற திகைப்பா? சுதாரித்துக் கொண்டு அவரே விளக்கினார்.

படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கலைன்னு சொல்றது உண்மையில்லை. வேணும்னா அந்த டாக்குமெண்ட்ஸை உங்களுக்கு காட்டறேன், வதந்திகளை நம்பாதீங்க என்றார். நாட்டாமையே தீர்ப்பு சொன்ன பிறகு மறுபேச்சு ஏது.

வெப்துனியாவைப் படிக்கவும்