பறட்டை தலையும், அழுக்கு உடையுமாக திரையில் தோன்றிக் கொண்டிருந்த கார்த்தியை ஸ்டைலிஷாக காட்டிய படம் பையா. தமன்னாவின் அழகும், யுவனின் இசையும், பரபரப்பான சில ஆக்ஷன் காட்சிகளும் பையாவை வெற்றிப் படமாக்கியது. படத்தின் வெற்றியில் முக்கியமான சதவீதம் யுவனையே சாரும்.
சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தை இயக்கி வருகிறார் லிங்குசாமி. ஆகஸ்ட் 15 படத்தை வெளியிடுவதாக திட்டம். அஞ்சான் வெளியானதும் ஆகஸ்டிலேயே கார்த்தியை வைத்து எண்ணி ஏழு நாள் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். படத்தில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள், தொழல்நுட்பக் கலைஞர்கள் முடிவாகவில்லை.