வேலையில்லா பட்டதாரியை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசை. தனுஷும் அமலா பாலும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பைனான்ஸ் செய்ய ஒருவரும் முன்வரவில்லை என்றும் தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன் நடிக்கும் டாணா படத்துக்கு எத்தனை கோடி தரவும் பைனான்சியர்கள் தயாராக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. வேலையில்லா பட்டதாரியை வாங்க ஆளிருக்குமா என்றளவுக்கு இந்த கிசுகிசுவின் வீச்சு இருந்தது.
மதுரை, திருச்சி, கோவை, சேலம், வட, தென் ஆற்காடு, செங்கல்பட்டு மற்றும் சென்னை பகுதிகளின் விநியோக உரிமையை பெற கடும் போட்டியும் நிலவியது.