ரஜினி நான்கு யுகங்கள் தாண்டி வந்துள்ளார் - வைரமுத்து

திங்கள், 10 மார்ச் 2014 (12:55 IST)
கோச்சடையான் பாடல்கள் வெளியீட்டு விழாவில் வைரமுத்து, ஷங்கர், சௌந்தர்யா உள்ளிட்டவர்கள் பேசினர். அவர்களின் பேச்சு வருமாறு.

வைரமுத்து

‘கோச்சடையான் தலைப்பு ஈர்ப்பானது. அதில் அழுத்தம் இருக்கும், பழமையும் இருக்கும். கோச்சடையான் சிவனின் இன்னொரு பெயர். பாண்டியர்களுக்கும் இந்த பெயர் உண்டு.
FILE

பல புதுமைகள் இதில் உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரஜினி நான்கு யுகங்கள் தாண்டி வந்திருக்கிறார். 40 வருடம் சிம்மாசனத்தில் நகர்த்த முடியாமல் அமர்ந்திருக்கிறார். அது மிகப்பெரிய சாதனை.

அவரது முதல் ரசிகனுக்கு இப்போது 65 வயது. 25 வயது உடையவரும் அவரது ரசிகனாக இருக்கிறார். 65 வயது ரசிகரும் 25 வயது ரசிகரையும் பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிதான். இதற்கு உழைப்பு மட்டும் காரணம் அல்ல. நல்ல எண்ணமும் இருக்கிறது.

‘படையப்பா படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் தங்க சங்கிலி கொடுத்தார். அதில் மனிதாபிமானம் தெரிந்தது. ‘பாபா படம் நஷ்டமானபோது வினியோகஸ்தர்களை அழைத்து நஷ்டத்தை நான் தருகிறேன் என்றார். அதில் கொடை உள்ளது தெரிந்தது.

சௌந்தர்யா

‘கோச்சடையான் கார்ட்டூன் படம் அல்ல. அனிமேஷன் படம் ஆகும். நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பாடல்கள் உள்ளது.
FILE

அப்பாவை (ரஜினிகாந்த்) வைத்து இயக்கியது பெருமை அளிக்கிறது. அவரது ருத்ரதாண்டவ நடன காட்சியும் படத்தில் இடம்பெற்றுள்ளது.

ஷங்கர்

இந்தப் படத்தை ரஜினி சாரோட வழக்கமான படமா நினைச்சு அவரது ரசிகர்கள் வரக்கூடாது.
FILE

டெக்னாலஜியில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம்கிறதை தெரிஞ்சிக்கிறதுக்காக வரணும்.

வெப்துனியாவைப் படிக்கவும்