மர்மயோகி தயாரிப்பாளர் மாற்றம்?

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (20:39 IST)
பெயருக்கேற்ப படம் குறித்து வெளிவரும் தகவல்கள் அனைத்தும் மர்மமாகவே உள்ளது. ஏழாம் நூற்றாண்டு கதையான மர்மயோகியில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதில் தொடங்கியது குழப்பம். பிறகு, மருதநாயகம்தான் மர்மயோகி என்றனர்.

படத்தை வால்ட் டிஸ்னி தயாரிக்கிறது, இல்லை பிரமிட் சாய்மீராதான் தயாரிப்பு, இல்லையில்லை இரண்டுபேரும் சேர்ந்து தயாரிக்கின்றனர்... இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் தாடியை தடவியபடி ஸ்கிரிப்ட் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறார் கமல்.

மர்மயோகியின் உத்தேச பட்ஜெட் 150 கோடி. 100 கோடி என்றால் நன்றாக இருக்கும் என கருதுகிறது சாய்மீரா. நூறை தாண்டினால் கையை கடிக்குமோ என்று பயம்.

இதன் காரணமாக வார்னர் பிரதர்ஸை கமல் அணுகியிருப்பதாக தகவல். செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து வார்னர் பிரதர்ஸ் தமிழில் படங்கள் தயாரிக்க முன்வந்துள்ள நிலையில், தனது மெகா பட்ஜெட் படத்துக்கும் அவர்ளிடம் பைனான்ஸ் எதிர்பார்க்கிறாராம் கமல்.

மும்பையில் நடக்கும் படத்தின் தொடக்க விழாவில் கமலுக்கு 150 கோடி தரப்போகும் மெகா பர்ஸ்காரர் யார் என்பது தெரியவரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்