மம்முட்டியின் கேங்ஸ்டர் - ஓடாதப் படத்துக்கு தீராத தலைவலி

வியாழன், 24 ஏப்ரல் 2014 (15:33 IST)
மம்முட்டி நடிப்பில் விஷு தின ஸ்பெஷலாக வெளிவந்த படம் கேங்ஸ்டர். இயக்கம் ஆஷிக் அபு. அபுவின் வித்தியாசமான முயற்சி இந்தமுறை செல்லுபடியாகவில்லை. படம் ப்ளாப். ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் ஆஷிக் அபுவை கழுவி ஊற்ற இது நல்ல சந்தர்ப்பம். மிச்சம் மீதி வைக்காமல் கழுவி துடைக்கிறார்கள்.
சைலன்ஸ், பாலயகால சகி, பிரைஸ் த லார்ட் என மூன்று சுமார் படங்களுக்குப் பிறகு மம்முட்டிக்கு இது நான்காவது தோல்வி. இந்த பெருந்துக்கத்துக்கு நடுவில் கேரள தணிக்கைக்குழுவும் கேங்ஸ்டர் படத்துக்கு எதிராக வரிந்து கட்டியிருக்கிறது.
 
எந்தப் படமாக இருந்தாலும் அதன் விளம்பரங்களில் - போஸ்டராக இருந்தாலும், பத்திரிகை விளம்பரமாக இருந்தாலும் - தணிக்கைச் சான்றிதழை குறிப்பிட வேண்டும். ஏ சான்றிதழ் கிடைத்ததாலா தெரியவில்லை, கேங்ஸ்டர் படத்தின் விளம்பரங்களில் ஏ என்று தணிக்கைச் சான்றை குறிக்கவில்லை. இது சென்சாரின் கவனத்துக்குவர, படம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கயிருப்பதாக அறிவித்துள்ளனர்.
 
இடி விழுந்தவன் காலில் பாம்பு கடித்தது என்பது இதுதானோ.

வெப்துனியாவைப் படிக்கவும்