மணிரத்னம் படத்தில் துல்கர் சல்மான், அலியா பட்...?

சனி, 23 ஆகஸ்ட் 2014 (19:10 IST)
நாகார்ஜுன், மகேஷ்பாபு, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் மணிரத்னம் இயக்குவதாக கூறப்பட்ட படம் இப்போதைக்கு டேக் ஆஃப் ஆகும் என்று தெரியவில்லை. அதற்குமுன் அலைபாயுதே போன்ற ரொமான்டிக் படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.
 
முன்பு மணிரத்னத்துக்கு தொடர் தோல்விகள் ஏற்பட்ட போது அதிலிருந்து அவரை தடுத்தது அலைபாயுதே படம்தான். இப்போதும் தொடர் தோல்விகள். மீண்டும் ஒரு ரொமான்டிக் படம்.
 
இந்தப் படத்தில் துல்கர் சல்மான், அலியா பட் நடிப்பதாக செய்தி கசிந்துள்ளது. ஆனால் இதுவரை மணிரத்னம் தரப்பு அலியா பட்டிடம் இது குறித்து பேசவில்லை என அவரது மேனேஜர் மறுத்துள்ளார். என்னுடைய படம் குறித்த எந்த செய்தியையும் மறுப்பதும், அங்கீகரிப்பதும் அந்தப் படம் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள்தான் என திருகலான ஒரு பதிலைக் கூறி, குழப்பியுள்ளார் துல்கர் சல்மான்.
 
எதுவாக இருப்பினும் விரைவில் மணிரத்னம் படப்பிடிப்புக்கு கிளம்பயிருக்கிறார் என்பது மட்டும் உறுதி.

வெப்துனியாவைப் படிக்கவும்