பூஜையில் விஷாலுடன் ஒரு பாடலுக்கு ஆடும் ஆண்ட்ரியா

புதன், 7 மே 2014 (15:12 IST)
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் பூஜை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் மார்க்கெட் போன்று அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த அரங்கில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளது.
இதில் விஷாலுடன் ஆட ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
ஒரு கல் ஒரு கண்ணாடி, இங்க என்ன சொல்லுது என பல படங்களில் ஆண்ட்ரியா சின்ன வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் ஒரு பாடலுக்கு அவர் ஆடுவது இதுவே முதல்முறையாம். 
 
பூஜையில் விஷால் ஜோ‌டியாக ஸ்ருதி நடிக்க, யுவன் இசையமைக்கிறார். அவரது இசையில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலுக்குதான் விஷாலும், ஆண்ட்ரியாவும் ஆட உள்ளனர்.
 
விஷாலின், விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்