பூஜையில் மொட்டை தலையுடன் தோன்றும் சத்யராஜ்

சனி, 19 ஏப்ரல் 2014 (14:56 IST)
குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சத்யராஜ். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதத்தை அவர் தளர்த்திய பிறகு வாய்ப்புகள் அவருக்கு அணிவகுக்கின்றன. 
 
பரத் நடிக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் சத்யராஜ் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் ஒப்பந்தமாகியிருக்கும் படம் ஹரியின் பூஜை.
 
தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பூஜை படத்தை தயாரித்து நடிக்கிறார் விஷால். அவருக்கு ஜோடி ஸ்ருதி. சில தினங்கள் முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது. கோயம்புத்தூரில் தொடங்குகிற கதை பீகாரில் முடிவது போல் திரைக்கதை அமைத்துள்ளார் ஹரி. ஸ்ருதி இதில் மாடர்ன் பெண்ணாக வருகிறார்.
 
இந்தப் படத்தில் சத்யராஜுக்கு போலீஸ் அதிகாரி வேடம். கொஞ்சம் முரட்டுத்தனமான வேடம். இதற்காக மொட்டை அடிக்க உள்ளார். 
 
இதற்கு முன் நூறாவது நாள், அமைதிப்படை போன்ற பல படங்களுக்காக சத்யராஜ் மொட்டை அடித்துள்ளது முக்கியமானது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்