பிரசன்னா நடிக்கும் கல்யாண சமையல் சாதம்

செவ்வாய், 4 டிசம்பர் 2012 (19:37 IST)
FILE
நோ நான்சென்ஸ் நடிகர்கள் என்று பிரகாஷ்ரா‌ஜ் இரண்டு பேரை குறிப்பிட்டார். ஒருவர் பிருத்விரா‌ஜ். இன்னொருவர் பிரசன்னா.

திறமையிருந்தும் பிரசன்னாவின் கே‌ரியர் அவ்வளவு பிரகாசமாக - அதாவது திறமைக்கேற்ற பிரகாசமாக இல்லை. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்கள்தான் அதிகம் அவரைத்தேடி வருகின்றன. இந்நிலையில் அவர் சோலோ ஹீரோவாக நடிக்கும் படம், கல்யாண சமையல் சாதம்.

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் பாடலை கேட்கும் போதே இதழோரம் புன்னகை தோன்றும். அதை அப்படியே இந்தப் படத்தில் இறக்கி வைக்கப் போகிறார்கள். அதாவது அவுட் அண்ட் அவுட் காமெடி படமாக இது உருவாகிறது.

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் தயா‌ரிக்க பிரசன்னா ஜோடியாக லேகா வாஷிங்டன் நடிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்