நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் கதை சொல்லும் கதம் கதம்

வியாழன், 11 செப்டம்பர் 2014 (18:29 IST)
கதம் கதம் என்றால் முடிந்தது என்று அர்த்தம். பாபா படத்தில் ரஜினி பேசிய இந்த பன்ச் டயலாக்தான் அவர் பேசிய டயலாக்குகளிலேயே நெகடிவானதாக இருந்திருக்கும். அதையே ஒரு படத்தின் பெயராக்கியிருக்கிறார்கள்.
 
நந்தா, நட்டு என்கிற நட்ராஜ் இணைந்து நடிக்கும் இதனை பாபு தூயவன் இயக்குகிறார். ஹீரோயினாக நடிப்பது சனம் ஷெட்டி. அம்புலி 3டி படத்தில் நடித்தவர்.
 
ஒரு நல்ல போலீஸையும், ஒரு கெட்ட போலீஸையும் சுற்றி நடக்கிற கதைதான் கதம் கதம். சனம் ஷெட்டி இதில் என்ஜிஓ வாக வருகிறார்.
 
ஆக்ஷன் த்ரில்லராக கதம் கதம் உருவாகி வருகிறது.
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்