நடிகையின் மிஸ் இந்தியா கனவு

புதன், 9 செப்டம்பர் 2009 (14:09 IST)
webdunia photo
WD
கனவு காணுங்கள் என்றார் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். நாடோடிகள் அபிநயாவுக்கும் ஒரு கனவு இருக்கிறது. காது கேட்காத, வாய் பேச முடியாத அபிநயா படத்தில் வாய் பேசுகிறவராக நடிப்பதே ஒரு சாதனைதான். ஆனால் அபிநயாவின் ஆசைகள் அதைவிட சிறகுகட்டி பறக்கிறது.

தனக்கு மிகவும் பிடித்தமான நடிகை என்று அபிநயாவை கூறியிருக்கிறார் இயக்குனர் சசிகுமார். அவரது புதிய படத்தில் ஹீரோயினாக நடிப்பதும் அவர்தான். அது மட்டுமா?

தெலுங்கில் தயாராகும் நாடோடிகள் ‌‌ரீமேக்கிலும் அபிநயா நடிக்கிறார். நாடோடிகளின் தமிழ், தெலுங்கு இரு பதிப்புகளிலும் நடிக்கும் ஒரே நட்சத்திரம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இ‌திலெல்லாம் திருப்தியடையவில்லை அபிநயா. மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதுதான் இவரது லட்சியமாம். அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறாராம். கனவுக்கு எல்லை இல்லை என்பது அபிநயா விஷயத்தில் உண்மைதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்