ஏற்கனவே அறிவித்த மாதிரி சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று தொடங்கியது.
அலெக்ஸ்பாண்டியனுக்குப் பிறகு சுராஜ் ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்குகிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இதன் பூஜை ஜுன் 1 நடந்தது. இன்று (ஜுன் 3) படப்பிடிப்பை தொடங்கயிருப்பதாக சுராஜ் அறிவித்திருந்தார். அதேபோல் படப்பிடிப்பு தொடங்கியது. ஜெயம் ரவியும் தனது ட்விட்டர் செய்தியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்றைய படப்பிடிப்பில் அஞ்சலி கலந்து கொள்வார் என சுராஜ் தெரிவித்திருந்தார். அவரை இயக்குனர் சங்கமும், மு.களஞ்சியமும் நடிக்க அனுமதிப்பார்களா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதுவரை தனது படங்களில் காமெடிக்கு வடிவேலையும், விவேக்கையும் பயன்படுத்தி வந்த சுராஜ் இந்தப் படத்தில் சூரிக்கு வாய்ப்பளித்துள்ளார்.