தெய்வத்திருமகள்

திங்கள், 10 பிப்ரவரி 2014 (15:21 IST)
கஷ்டப்படுகிறவர்களுக்கு இஷ்டப்பட்டு உதவுகிறவர்கள் எல்லோருமே தெய்வங்கள்தான். அன்பே சிவம் சொல்லும் இந்த வாழ்க்கைத் தத்துவத்தை அப்படியே தனது வாழ்வில் வரித்துக் கொண்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
FILE

தனது பிறந்தநாளில் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்வி மற்றும் பிற செலவுகளை கவனித்து வருகிறார். இதுவரை இவர் தத்தெடுத்த குழந்தைகளின் எண்ணிக்கை 24 ஐ தொடுகிறது.
FILE

அடுத்தக்கட்டமாக இந்தக் குழந்தைகளுக்காக சிறுவர் இல்லம் ஒன்றை கட்டுகிறார். இதற்கு அவருக்கு துணைபுரிவது துர்கா. கடவுள் துர்கை அல்ல, தெலுங்குப் படம் துர்கா.

நாக சைதன்யாவுடன் நடிக்கும் இந்தப் படத்தில் தனக்குக் கிடைக்கும் சம்பளத்தை அப்படியே சிறுவர் இல்லம் கட்டுவற்கு செலவிடப் போகிறாராம். கல்விக்காக அறக்கட்டளை அமைத்து சில லட்சங்கள் தந்து பல கோடிக்கு விளம்பரம் தேடுகிறவர்களுக்கிடையில் ஹன்சிகாவின் பணி மகத்தானது.
FILE

தற்போது மான் கராத்தே, வாலு, அரண்மனை உள்பட சில படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார். இதில் அரண்மனையில் தெய்வ அருள் பொருந்திய பெண்ணாக வருகிறாராம் ஹன்சிகா.

சில நேரங்களில் அவர்களின் குணத்தை பிரபதிபலிப்பது போல் கதாபாத்திரங்களும் அமைவதுண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்