தமிழில் திலகன்

சனி, 12 பிப்ரவரி 2011 (14:19 IST)
மலையாள நடிகர் சங்கமான அம்மா நடிகர் திலகனுக்கு தடை விதித்திருக்கிறது. இந்த‌த் தடையை முதலமைச்சர் வரை கொண்டு சென்ற பிறகும் திலகனுக்கு எந்தவொரு பயனுமில்லை. அரசியல் நுழைய முடியாத கோட்டை மலையாள திரையுலகம்.

தனது மீதான தடைக்கு நெடுமுடிவேணுவும், மம்முட்டியுமே காரணம் என பொது மேடையிலேயே கர்‌ஜித்திருக்கிறார் திலகன். இது அவர் மீதான தடையை மேலும் வலுவடையச் செய்திருக்கிறது.

மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர் ஸ்டார்களின் பரம எதி‌ரியான இயக்குனர் வினயன் தமிழில் திலகனை நடிக்க வைக்கிறார். மலையாள நடிகர் சங்கத்தின் தடையை உடைக்க வேண்டும் என்பதற்காகவே திலகன் நடிக்க வைக்கப்படுகிறார் என்பது ஒருவகையில் சந்தோஷமான செய்தி.

தமிழில் இயக்கும் காதல் வேதம் என்ற படத்தில் திலகனை சுதந்திர போராட்ட‌த் தியாகியாக நடிக்க வைக்கிறார் வினயன். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. தீவிரவாதத்துக்கு எதிரான படமாம் இது.

தடையும்கூட ஒருவகையான தீவிரவாதம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்