பெரிய ஹீரோக்களை வைத்து கமர்ஷியல் படங்கள் எடுத்து வந்த விஜய் அதிலிருந்து விலகி குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்கும் படம் சைவம். தாத்தா, பேத்தி உறவை மையமாக வைத்து நாம் இழந்துவரும் கிராமத்து வாழ்க்கையை இந்தப் படம் காட்சிப்படுத்தியுள்ளது. பேபி சாராவும், நாசரும் முக்கிய வேடத்தில் நடிக்க நாசரின் மகன் அவரது பேரனாக நடித்துள்ளார்.