சென்னையில் நடந்த கார்த்தியின் பொம்மன் படப்பூஜை

வெள்ளி, 20 ஜூன் 2014 (11:29 IST)
சென்னையில் நேற்று (19) கார்த்தி நடிக்கும் பொம்மன் படத்தின் பூஜை நடந்தது. கார்த்தியின் தந்தை சிவகுமார் இந்த பூஜையில் கலந்து கொண்டார்.
அட்டகத்தி இரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். படம் முடிவடையும் நிலையில் உள்ளது. வரும் 23 -ம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட்டு அடுத்த மாதம் படத்தை வெளியிடுகின்றனர். 
இதையடுத்து அவர் குட்டிப்புலி முத்தையா இயக்கத்தில் பொம்மன் படத்தில் நடிக்க உள்ளார். ராஜ்கிரண் முக்கிய வேடம் ஏற்கும் பொம்மன் கிராமத்துப் படம். லட்சுமி மேனன் கார்த்தியின் ஜோ‌டியாக நடிப்பார் என தெரிகிறது.
 
நேற்று இதன் பூஜை எளிமையாக சென்னையில் நடத்தப்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்