சினேகா சொன்ன ஹனிமூன் ஸ்பாட்

திங்கள், 18 ஜூன் 2012 (12:03 IST)
FILE
சினேகா, பிரசன்னா திருமண அறிவிப்பை வெளியிட்ட போது அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று ஹனிமூனுக்கு எங்கு செல்கிறீர்கள்?

முடிக்க வேண்டிய படங்கள் இருவருக்கும் இருப்பதால் இப்போதைக்கு ஹனிமூன் கிடையாது. கமிட்மெண்டை முடித்தப் பிறகே ஹனிமூன்.

ஆனால் எந்த நாட்டுக்கு செல்வது என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம் என்று சினேகா தெரிவித்திருந்தார்.

இப்போது கமிட்மெண்ட்களை ஓரளவு முடித்துவிட்டு இந்த புதுமண தம்பதி ஹனிமூன் சென்றிருக்கிறார்கள். சினேகா சொன்ன அந்த ஹனிமூன் ஸ்பாட் அமெரிக்கா.

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்த போதுதான் சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் காதல் மலர்ந்தது.

அந்த மலரும் நினைவுக்காக அமெரிக்காவுக்கு ஹனிமூன் சென்றிருக்கிறக்ர்கள். காதல் பிறந்த இடத்திலேயே ஹனிமூன்...

இதுவும் நல்லாதான் இருக்கு.

வெப்துனியாவைப் படிக்கவும்