சினிமாவுக்கு கட்டணம் வசூ‌லி‌த்த ‌தின‌ம்

செவ்வாய், 20 மே 2014 (17:26 IST)
உலகத்தில் முதன் முதலாக திரைப்படத்திற்கு கட்டண‌ம் வசூலித்தது யங் கிரியோ வெர்சஸ் பேட்லிங் கார்லஸ் என்ற படத்துக்குத்தான். 
 
அமெரிக்காவிலுள்ள மன்ஹாட்டன் பகுதியில் இருக்கும் மேடிசன் ஸ்கொயர் கார்டன் மைதனத்தில் நடந்த குத்துச் சண்டையை ஷட்வில்லி லதா, அவரது மகன்கள் ஓட்லே, கிரே ஆகிய மூவரும் படம் பிடித்தனர். மொத்தம் எட்டு நிமிடங்கள் ஓடும் இந்த‌ப் படம், ஒரே ஷாட்டாக எடுக்கப்பட்டதாகும். 
 
இதை தொகுத்து நியூயார்க்கில் உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் ஸ்டோர்பிரன்ட் தியேட்டரில் இன்றைய தினமான மே 20-ல் திரையிட்டார்கள். அதற்கு முதன் முதலாக கட்டணமும் வசூல் செய்யப்பட்டது. 
 
அதனால், இன்றைய தினம் சினிமாவுக்கு கட்டணம் வசூலித்த நாளாக நினைவு கொள்ளப்படுகிறது. அத்தோடு உலகின் முதல் திரைப்படம் என்ற பெயரையும் பெறுகிறது யங் கிரியோ வெர்சஸ் பேட்லிங் கார்லஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்