காவல்துறை பிடியில் காவல்காரன்

வியாழன், 1 ஜூலை 2010 (16:36 IST)
விஜய் நடிக்கும் படத்துக்கு புதுச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கல் குறித்து விசா‌‌ரித்து அறிக்கை தர நீதிமன்றம் காவல்துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளது.

விஜய் நடித்துவரும் காவல்காரன் படத்தை சித்திக் இயக்கி வருகிறார். இந்தப் படம் மலையாளத்தில் சித்திக் இயக்கிய பாடிகாட் படத்தின் ‌‌ரிமேக்.

மலையாளத்தில் பாடிகாட் படத்தை தயா‌‌ரித்த hனி தாமஸ், பாடிகாட் படத்தின் அனைத்து உ‌‌ரிமைகளும் என்னிடமே உள்ளது, அப்படியிருக்க அந்தப் படத்தை சித்திக் எப்படி தமிழில் ‌‌ரிமேக் செய்யலாம் என்று நீதிமன்ற படியேறியிருக்கிறார்.

பாடிகாட் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் முதற்கொண்டு இயக்கம் வரை அனைத்தும் என்னுளடைய கற்பனையில், உழைப்பில் உருவானது. இதை எந்த மொழில் ‌‌ரிமேக் செய்யவும் உ‌‌ரிமை உள்ளது என்பது சித்திக்கின் வாதம்.

ஜானி தாமஸின் மனுவை விசா‌‌ரித்த நீதிமன்றம் இது குறித்து விசா‌‌ரித்து உ‌‌ரிய தகவலை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளது.

கதையின் உ‌‌ரிமையை அதை உருவாக்கியவருக்கா? இல்லை அதை படமாக எடுக்க பணம் போட்டவருக்கா? இன்னும் சில நாட்களில் தெ‌ரிந்து‌விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்