காட்டுப் பகுதியில் விஜய் படத்தின் படப்பிடிப்பு

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (17:37 IST)
கத்தி படம் இறுதிகட்டத்தை நெருங்குகிறது. இதையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
 
விஜய்யுடன் ஸ்ருதி, ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி நடிக்கின்றனர். நட்டு ஒளிப்பதிவு செய்ய தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
 
தற்போது படத்தின் லொகேஷன் தேடும் பணி நடந்து வருகிறது. கேரளாவிலுள்ள சாலக்குடி, நெல்லியம்பதி காட்டுப் பகுதிகளில் லொகேஷன் தேர்வு செய்துள்ளனர். வட இந்தியாவிலும், கேரளாவிலும் படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
 
விரைவில் படத்தின் பெயரை அறிவிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்