கமல்ஹாசனை சந்தித்த பிரபல இயக்குனர்… புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சி!

சனி, 18 ஜூன் 2022 (14:31 IST)
நடிகர் கமல்ஹாசனை விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் ரவிக்குமார் சந்தித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த படம் கடந்த 13 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகிறது. இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூலமாக கிட்டத்தட்ட 300 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து திரை பிரபலங்கள் பலரும் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். அந்த வகையில் இன்று நேற்று நாளை மற்றும் அயலான் ஆகிய படங்களின் இயக்குனர் ரவிக்குமார் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு குறித்து “நான் வியந்து பார்க்கும் ஆளுமை. அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்ததும், டைம் டராவல்  பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்