புதன், 18 ஆகஸ்ட் 2010 (15:47 IST)
தமிழில் ரெட்டச்சுழி படத்தை இயக்கிய தாமிரா அடுத்து வேற்று மொழியில் தனது திறமையை காட்ட இருக்கிறார்.
பாலசந்தரிடம் உதவியாளராக இருந்தவர் தாமிரா. கவிஞர், எழுத்தாளர். பல தொலைக்காட்சி தொடர்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். பாலசந்தரின் பொய் படத்திற்கும் இவர்தான் வசனம்.
இவரது முதல் படம் பாலசந்தர், பாரதிராஜா நடித்த ரெட்டச்சுழி. படம் சுமாராகவே போனது.
தாமிரா தனது இரண்டாவது படத்தை கன்னடத்தில் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் கஸ்தூரி நடிக்கிறார்.