உனக்கென நானிருப்பேன் - காதல் தியாகி

திங்கள், 12 அக்டோபர் 2009 (15:17 IST)
காதல் தியாகிகளின் கதை ஆண்டுக்கு ஒன்றிரண்டாவது வந்து கொண்டுதான் இருக்கிறது. என்.சுந்தரேஸ்வரனின் உனக்கென நானிருப்பேன் படத்தின் கதையும் காதல் தியாகியை பற்றியதுதான்.

தோழா படத்துக்குப் பிறகு சுந்தரேஸ்வரன் இயக்கும் படம் இது. வரும் 23 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. அசோக்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

காதல் படத்தில் பரத்துக்கு மனநிலை தவறியதும் படம் முடிந்துவிடும். உனக்கென நான் இருப்பேனில் கதாநாயகனுக்கு மனநிலை தவறியதிலிருந்து படம் ஆரம்பமாகும். அவனை விட்டு காதலி ஏன் பி‌ரிந்தாள்? அவள் தனது கணவனுடன் வாழ கதாநாயகன் செய்த தியாகம் என்ன என்பதை படம் விளக்குகிறது.

வெறுமனே காதல், தியாகம் என்றால் ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்க முடியாது என்பதால் நடுவில் கிளாமர் ஹீரோயின் எபிசோடை சொருகியிருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல் கம்போஸிங் நடந்து கொண்டிருக்கிறது. கிளாமர், ஹோம்லி என இரு வேறு வெரைட்டியில் ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்