ஆக. 14 இசையாக வரும் இளையராஜா, யுவன், தனுஷ்

திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (11:33 IST)
வை ராஜா வை படத்தின் ஒரு பாடலை ஆக. 14 -ம் தேதி விளம்பரத்துக்காக வெளியிடுகின்றனர்.
 
படத்தின் அனைத்துப் பாடல்களையும் வெளியிடும் முன்பு ஒரு பாடலை மட்டும் வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில் யுவன் இசையில் தனுஷ் ஒரு பாடலை எழுதியுள்ளார். குறிப்பிட்ட இந்தப் பாடலை பாடியவர் இளையராஜா.
 
இந்தப் பாடலை வருகிற 14 -ம் தேதி வெளியிடுகின்றனர்.
 
வை ராஜா வையில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், தாப்ஸி, டேனியல் பாலாஜி நடித்துள்ளனர். ஏஜிஎஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்