அந்தப் பக்கமே போக மாட்டேன்

வியாழன், 24 ஏப்ரல் 2014 (15:51 IST)
நடிகர் கார்த்திக் திரையுலகில் ஜாம்பவான். நவரச நாயகன். அரசியலில் பிரவேசித்த பிறகு அவரிடமிருந்து ஒரேயொரு ரசம்தான் வெளிப்படுகிறது. காமெடி ரசம்.
 
அரசியல் விகடகவியில் டிஆரையெல்லாம் கார்த்திக் எப்போதே முந்திவிட்டார். அவரது மகன் எப்படி? அப்பாவைப் போல் நடிக்க வந்தவர் எதிர்காலத்தில் தலையில் தொப்பியுடன் மேடையேறி மைக் பிடிப்பாரா?
 
என்னமோ ஏதோ பத்திரிகையாளர் சந்திப்பில் கௌதம் கார்த்திக்கிடம் நேரடியாகவே இந்த கேள்வி முன் வைக்கப்பட்டது.
 
அரசியல் அப்பாவின் டிபார்ட்மெண்ட். அந்தப் பக்கம் நான் போறதில்லை. இப்போது மட்டுமில்லை எப்போதுமே அரசியல் பக்கம் போகவே மாட்டேன் என்றார் உறுதியாக.
 
அப்பாவின் அரசியல் பிள்ளையை அந்தளவு கடுமையாக பாதித்திருக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்