பன்றி காய்ச்சல்: ‌விழிப்புணர்வு‌க்கு இணையதளம்

வெள்ளி, 11 செப்டம்பர் 2009 (11:21 IST)
பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்து‌ம் வகை‌யி‌ல் புதிய இணைய தளத்தை தமிழக அரசு துவ‌க்‌கி உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், பன்றி காய்ச்சல் (எச்1என்1) இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் பரவ தொடங்கியது. தமிழக அரசு போர்க்கால அடைப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

மேலும் இந்நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவும், மக்களுக்கு அடிக்கடி ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை அளிக்கவும் மாநில பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை ஒத்துழைப்போடு, www.swineflutninfo.in என்ற இணைய தள‌த்தை உருவா‌க்‌கியு‌ள்ளது.

இதில், பன்றி காய்ச்சல் குறித்த விவரங்களை தமிழ், ஆங்கிலத்தில் அறியலாம் எ‌ன்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்