கொலம்பியா அதிபருக்கு பன்றிக் காய்ச்சல்

திங்கள், 31 ஆகஸ்ட் 2009 (15:05 IST)
கொலம்பியா அதிபர் அல்வரோ உரிப் (57), பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சமூக பாதுகாப்பு அமைச்சர் டெய்கோ பலசியோ தெரிவித்துள்ளார்.

இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டெய்கோ, பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்குதல் இருந்தாலும், அதிபர் அல்வரோவின் உடல்நலம் சீராக உள்ளதாகவும், அவருக்கு அதிபர் மாளிகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கடந்த 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அர்ஜென்டீனாவில் நடந்த தெற்கு அமெரிக்கத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய பின்னர் உடல் நலக்குறைவால் அதிபர் அல்வரோ அவதிப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்