லண்டன் ஹீத்ரு ஸ்பேஸ் பஸ் டெர்மினலில் அபிபிரயாசையுடன் காத்திருந்தான். சுஷாவை ஏன் இன்னமும் காணோம்? வலக் கை மணிக்கடடைப் பார்த்தான். ஹைடெக் மின் கடிகாரம் பச்சை நிறத்தில் மணி 1900 என்றது. 1830க்கே வர வேண்டியவள். முப்பது நிமித தாமதத்துக்கு அப்புறமும் வரவில்லை. அயர்ச்சியுடன் ஆகாயத்தை நோக்கி அண்ணாந்தான். செயற்கை ஸாடிலைட் சூரியன் இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது.
வால் நட்சத்திரம் ஸ்விப்ட் டர்ட்டில் மோதியதில் பாதி உலகம்ட அழிந்து மீதி உலகம் மாறிவிட்டது. மனிதர்கள் பல மொழிகளைக் கற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் ஒன்றில் கூட உருப்படி இல்லை. தாய்மொழியைக் கூடத் தப்பாகப் பிரயோகிக்கிறார்கள். இப்போதெல்லாம் மனிதனை மனிதன் ஆள்வதில்லை. சாலையோர சிக்னல் முதல் சட்டசபை மசோதா வரை சகலமும் கம்ப்யூட்டர்தான். கூட்டத் கழித்தல் கணக்குக்கே கம்ப்யூட்டரை நாடிய மனிதன், தன் உடல் சோம்பலாலும் மூளைச் சோம்பலாலும் கம்ப்யூட்டரை சரணடையப் போய் - இதன் இறுதி விளைவாய் - சூப்பர் கம்ப்யூட்டர் மைத்ரா உலகை ஆள்கிறது. எல்லாம் மாறிவிட்டது. தாமதிப்பதில் மட்டும் இந்தப் பெண்கள் இத்தனை நூற்றாண்டுகளில் மாறவே இல்லை.
சுஷா எங்கே போய்த் தொலைந்தாள்? ஒரு வேளை மைத்ராவின் ஸாடிலைட் கண்களில் அகப்பட்டு... ஸ்கேன் செய்யப்பட்டு... மை குட்னஸ். நினைக்கவே பயந்தான். வெதர் கண்டிஷனரின் உபயத்தால் அந்தப் பிராந்தியம் முழுவதுமே குளிர் பதனம் செய்யப்பட்டும் கூட அவனுக்குப் பயத்தில் குப்பென்று வியர்த்தது.
டெர்மினலை ஆராய்ந்தான். அலுமினிய லிப்ட்கள். ஃபைபர் எஸ்கலேட்டர்கள். ப்ரூனோ கிரகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வயலட் நிற செடிகள். காற்று நிரப்பப்பட்ட பாலியூரிதேன் சோபாக்கள். டெர்மினலை ஒட்டிய வெளிப்புறச் சாலையில் ஈதனால் வாகனங்கள். ஃபைபர் எஸ்கலேட்டரில் ஓர் அமெரிக்க (அல்லது ஐரோப்பிய?) இளம்பெண்ணும் நீக்ரோ இளைஞனும் தோளில் கைபோட்டவாறு போய்க் கொண்டிருந்தனர். எட்டத்தில் ஒரு ஜப்பானிய இளைஞன் ஒரு பாகிஸ்தானிய இளைஞியை தப்புத்தப்பாய் தடவிக் கொண்டிருந்தான். வெள்ளையன் கறுப்பியை மணக்க வேண்டும். இந்தியன் வெள்ளைக் காரியை ஆஸ்திரேலியன் பிக்மிக்காரியை. தப்பித் தவறி இந்தியன் இந்தியப் பெண்ணையோ அல்லது அமெரிக்கன் அமெரிக்கப் பெண்ணையோ மணக்கக் கூடாது. தப்பு.
வெவ்வேறு இனங்கள் கலந்தால்தான் எல்லா இனங்களின் தனித்தன்மைகள் மறையும். எல்லாம் பாகுபாடற்ற ஒரே இனமாக மாறும். அந்தப் புதிய இனம் புதுயுகம் படைக்கும் என்பது மைத்ராவின் சித்தாந்தம். எனவே இன்னாருக்கு இன்னார் ஜோடி என்பதைக் கம்ப்யூட்டர் தேர்வு செய்யும். தான் தோன்றியாக ஆளாளுக்கு துணையைத் தேர்வு செய்து கொள்ளக் கூடாது. ஆகவே, சந்தேகத்துக்கிடமின்றி காதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்டது.
ஆனால், கல்யாணத்துக்கு முன்னால் ஆணும் பெண்ணும் டேட்டிங் வைத்துக் கொள்ளலாம். செக்ஸ் கூட வைத்துக் கொள்ளலாம். தப்பில்லை. பசி, தூக்கம் மாதிரி செக்ஸ் ஓர் உபாதை. அதை யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் தீர்த்துக் கொள்ளலாம்.
செக்ஸ் பயாலஜிகல் பிரச்சினை. தனி நபர் சமாச்சாரம். அதற்கு இனம் போன்ற கட்டுப்பாடு தேவை இல்லை. ஆனால் கர்ப்பம் தரித்தால் அது சமூகப் பிரச்சினை. அதற்குக் கட்டுப்பாடு தேவை என்பது மைத்ராவின் சித்தாந்தம்.
மூன்று மாதங்களுக்கு முன்பு வரை எவளோ ஒரு போலந்துக்காரியை அல்லது ஹாலந்துக் காரியையோ தான் அபி தன் வருங்கால மனைவியாகக் கற்பனை செய்து கொண்டிருந்தான்.
ஒரு ஜனவரி மாதத்து சாயங்கால வேளையில் பிரான்ஸில் அது நடந்தது. பாரிஸ் நகரத் தெரு ஒன்றின் பிளாட்பார ரெஸ்டாரண்டில் கறுப்புக் காப்பியில் சர்க்கரை க்யூப்களைப் போட்டு ஸ்பூனில் கலக்கிக் கொண்டிருந்தபோதுதான் அபி அவளைக் கவனித்தான். அவள் இயல்பாக வந்து அவன் மேஜையின் எதிர் நாற்காலியில் உட்கார்ந்தாள். தென்னிந்தியப் பெண் மாதிரி தோன்றினாள். நேர்த்தியான க்ளாஸிகல் முகம். வாளிப்பான சந்தன நிறக்கைகள். உறுதியான நிமிர்ந்த மார்பகம். ஆண்களால் அதிகம் உபயோகப்படுத்தப்படாத மாதிரி புதுசாகத் தெரிந்தாள்.
சட்டென்று அவன் மனசில் தோன்றியது. என் மேஜையின் எதிரே ஒரு தேவதை தப்பு. பெண்ணை தேவதை என்றெல்லாம் வர்ணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. உதவாக்கரை வர்ணனைகள் காதலை நோக்கிச் செல்லும். காதல் காட்டு மிராண்டித்தனம் என்பது மைத்ராவின் சித்தாந்தம்.
காதல் கதைகள், கவிதைகள் எழுதுவது கூடத் தடை செய்யப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் கதை, கவிதைகளை கம்ப்யூட்டர்கள் மட்டுமே எழுதுகின்றன. அல்ஜீப்ரா ஈக்வேஷன் மாதிரி புரியாத கவிதைகள். எதிரில் இருப்பவள் அசல் கவிதை, நல்ல கவிதை, இயல்பான கவிதை என அபிக்குத் தோன்றியது. பெண்ணிடம் இதயம் வசப்படலாமா, மைத்ராவின் விதிகளுக்கு முரணானதாயிற்றே? குழம்பினாள்.
அவள் ரோபோ பேரரிடம் ஸாண்ட்விச்சுக்கும் லெமன் டீக்கும் ஆர்டர் சொன்னாள். பின் தன் ஹாண்ட்பேக்கிலிருந்து ஃப்ளாப்பியைப் போட்டு, திரையில் வந்த எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். கதையோ, சினிமாவோ என்னவென்று புரியவில்லை. இப்போதெல்லாம் யார் பத்ரிக்கை, புத்தகமெல்லாம் படிக்கிறார்கள்? எல்லாமே பிளாப்பியில் வருகின்றன. பிளாப்பியைப் பொருத்தி கம்ப்யூட்டர் திரையில் எழுத்துக்களைப் பார்த்து வாசிக்க வேண்டியதுதான். சினிமாவா? டிவி விசிஆர் எதற்கு? அதெல்லாம் பழங்காலத்து சமாச்சாரம். இப்போது எல்லாமே கம்ப்யூட்டர்தான்.
கம்ப்யூட்டர் திரையிலிருந்து தன் பார்வையை விலக்கி ஓரிருமுறை அவனைப் பார்த்தாள். அவனுள் நரம்புக்கு நரம்பு மின் அதிர்ச்சி ஏற்பட்ட மாதிரி இருந்தது.
ஒட்ட கிராப் வெட்டிக் கொள்ளும் நவீன இளம் பெண்கள் போலின்றி நீளமாக முடி வைத்திருந்தாள். சிகரெட் வாசனை வீசாத உடம்பும், நிகோடின் கறை படியாத உதடுகளும், கறை படியாத பளிச் பற்களுமாய் சுத்தமாக இருந்தாள். செயற்கை உள்ளாடைகள் ஏதுமின்றி திண்மையான உண்மையான மார்புகளுடன் இருந்தாள். காதுகளில் பிளாட்டினம் தொங்கட்டான்களும், கை விரல்களில் பிளாட்டின மோதிரமும் அணிந்திருந்தாள். தற்செயலாகத் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் தன்னையே குறுகுறுவென்று பார்ப்பதைக் கண்டு முகம் சிவந்தாள்.
அவளிடம் பேச வேண்டும் போல் அபி உணர்ந்தான். எந்த மொழியில் பேசலாம்?
"நீங்கள் இந்தியரா?" என்று அபி அவளிடம் பிரெஞ்சில் கேட்டான்.
எதிர்பாராத விதமாக இவன் பேசியதால் திடுக்கிட்ட அவள்,
"ஆமாம்.. நீங்கள்" என்று பதிலுக்குக் கேட்டாள்.
"நானும்தான். தழிழன்"
"தமிழ்... தமிழரா... நான் கூட தமிழ்ப் பெண்தான்" என்று அவள் பரவசமானாள்.
அவள் பாரிஸில் லூமியர் சதுக்கத்தில், வால்டேர் மாளிகையின் இருபத்து நான்காவது மாடியில் தொழில் நுட்ப உதவியாளராகப் பணி புரிகிறாள். பிரான்ஸின் கிழக்கு எல்லையில் ஸ்ட்ரர்ஸ்பர்க்கில் இரண்டு ரூம் அபார்ட்மெண்டில்ம ஒற்றை ஆளாய் வசிக்கிறாள். அபார்ட்மெண்டின் நம்பரையும், போனோவிஷன் நம்பரையும் சொன்னாள்.
இரண்டொருதரம் போனோவிஷனில் பேசியபிறகு அபி அவள் அபார்ட்மெண்டுக்குப் போனான்.
தனிமையில், எக்குத்தப்பான நெருக்கத்தில் அவர்கள் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி மற்றவர் தெரிந்து கொண்டார்கள்.
கொஞ்ச நாட்கள் தொட்டு, உராய்ந்து, பரஸ்பர பயங்கள் விலகின பின் ஒரு நாள் அவள் அபார்ட்மெண்டுக்குப் போனான் அபி. அவள் வித்தியாசமான குதூகலத்துடன் அவன் எதிரில் சில ஃபிளாப்பிகளைப் போட்டுவிட்டு, அவன் எதிரிலேயே உடைகளைக் களைந்தவாறே குளிக்கப் போனாள்.
தாஸ்தாயெவ்ஸ்கியின் கரமஸாவ் சகோதரர்களின் (உளவியல் நாவல்கள் தடை செய்யப்படவில்லை) இரண்டாவது அத்தியாயத்துக்குள் அவன் நுழைந்தபோது. அவள் அரைகுறை ஈர உடம்புடன் பாத்ரூமிலிருந்து வெளி வந்தாள். அவனருகில் நெருங்கி நின்று... மயக்கும் வாசனையுடன்,
"எங்கே வைத்துக் கொள்ளலாம்? இங்கேயவா அல்லது உள் ரூமிலா?"
"எதை?"
"செக்ஸ்"
"வாட்?"
"என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேட்டேன்."
"அதைவிட மேலான ஒன்றை உன்னிடம் வைத்துக் கொள்ள விரும்புகிறேன்."
"அப்படி என்றால்?"
அதற்கு அவன் சொன்ன பதிலைக் கேட்டு கதிகலங்கினாள்.
"உன்னைக் காதலிக்க விரும்புகிறேன் பெண்ணே!"
அவள் கலவரத்துடன் அந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ காமிராவைப் பார்த்தாள்.
அபி அவளைத் தரதரவென்று மைத்ராவின் மைக்ரோ காமிராவின் கண்ணுக்கு அப்பால் இழுத்துப் போனான்.
"ஸ்டுப்பிட்! அது ஆண்ட்ரோஜன் - எஸ்ட்ரோஜன் சமாச்சாரம். பொங்குவது பரவசமில்லை. ஹார்மோன். பெண்ணைப் பார்த்தால் ஆணுக்கும் ஆணைப் பார்த்தால் பெண்ணுக்கும் சுரப்பது ஹார்மோன். காதல் அல்ல."
"ஷிட்! செக்ஸ் என்பது ஒன் பாத்ரூம் சமாச்சாரம் இல்லை. பெண் என்பவள் உபாதை தீர்க்கும் டாய்லெட்டும் இல்லை. காதல் இல்லாத செக்ஸ் ஸாப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டருக்குச் சமம். புரிந்ததா?"
அதற்குள் மைக்ரோ காமிராவின் எல்லையைவிட்டு அவர்கள் வெளியேறி ரகசியம் பேசினதற்கு, விண் வெளி காண்டோரிலிருந்து ரேடியோவில் கேள்வி வந்தது. செக்ஸ் சமாச்சாரம் என்பதால் ஒதுங்கினதாக அபி காரணம் சொன்னான். சுஷா புன்னகைத்தாள்.
அதன் பின்னர் சில நாட்களில் அவள் புரிந்து கொண்டாள்; அந்தத் தவிப்பை அந்த அவஸ்தையை; அந்த பரவசத்தை; அதன் பேர் காதல்,
மைத்ரர்வின் காண்டோர் கழுகுக் கண்களையும், அறைக்கு அறை பொருத்தப்பட்ட ஹைடெக் காமிராக்களையும் மீறி இருவரும் காதலிக்க ஆரம்பித்தாயிற்று.
உடனடியாக அடுத்த நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டும். சர்க்கார் பிக்கு ஒரு நெதர்லாந்துக் காரியையோ அல்லது சுஷாவுக்கு ஓர் ஆஸ்திரேலிய ஆசாமியையோ அனுப்புவதற்குள் இவர்கள் கல்யாணம் செய்து கொண்டுவிட வேண்டும். தாமதித்தால் சிக்கல் நேரும். அதற்கு ஓர் அருமையான திட்டத்தை அபி தயாரித்திருந்தான். அதற்காகவே சுஷாவை இங்கு வரச் சொல்லியிருந்தான். தடிக்கழுதை இன்னும் வரவில்லையே.
அம்பு வடிவ ஸ்பேஸ் பஸ் வந்து நின்றது. நியூமாட்டிக் கதவு வாய் பிளந்து கொளள் அலுமினிய நாக்கு மாதிரி படிக்கட்டு வெளியே நீண்டது. தரை தொட்டது. இரண்டொரு பயணிகளுக்குப் பின் சுஷா இறங்கினாள். அபியின் மனசு சந்தோஷக் குற்றாலத்தில் குளித்தது.
சுஷா அவன் அருகில் வந்தாள். களைத்திருந்தாள். அவன் தோளைத் தொட்டு தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டாள்.
"ஏதோ முக்கியமான திட்டம் என்றீர்களே, என்ன அது?"
"வா,சொல்கிறேன்"
பக்கத்தில் செயற்கைக் குளம். அதில் மிதக்கும் ரெஸ்ட்டாரண்ட். ஆட்கள் அதிகம் இல்லை இங்கே வந்து ரகசியம் பேசுங்களேன் என்று கெஞ்சுகிற மாதிரி ஏகாந்தமாக இருந்தது.
ரெஸ்ட்டாரண்டின் ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் போய் உட்கார்ந்து, கிட்ட வந்த ரோபோவை இரண்டு ப்ளேட் காளான் கட்லெட்டுக்கும் சோயா பீன்ஸ் சூப்புக்கும் ஆர்டர் கொடுத்துத் துரத்தி விட்டு அபி சுஷாவைப் பார்த்தான்.
பட்டுப் பூச்சியின் இறக்கையாய் கண் இமைகள் படபடக்க, "என்ன விஷயம்?" என்று கேட்டாள் சுஷா.
"நாம் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறோம்.அதுவும் அரசின் ஒப்புதலுடன்"
"எப்படி... எப்படி?"
"ஜனன மரணப் பிரிவில் நான் வேலை செய்கிறேன் இல்லையா? பக்கத்து சீட் பிரேம் பீட்டர்ஸ் என்னிடம் ஓடி வந்து சொன்னான். ஒரு போலந்துக்காரி செத்துவிட்டாள். வயசு இருபத்திநாலு. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது என்றான். என்ன யோசனை என்று கேட்டேன். இவள் எப்படியும் செத்துப் போய்விட்டாள். இவள் பெயரைப் பதிந்தால் என்ன, விட்டுத் தொலைத்தால்தான் என்ன? இவள் பெயரைப் பதியாமல் விட்டுவிடுகிறேன். உன் காதலியை இவளாக மாற்றிவிடு. இவள் வெள்ளைக்காரி என்பதால் இவளோடு நீ ஜோடி சேர்வதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இராது!"
"நான் யோசித்துப் பார்த்தேன். முடிவு செய்துவிட்டேன்"
"என்னவென்று?"
"அவள் பெயரை மரணப் பட்டியலிலிருந்து நீக்கி, திருமண ஜோடிப் பட்டியலில் என் பெயருக்கு நேராக அவள் பெயரைப் பதிவதற்கு ஏற்பாடு செய்து விட்டேன்."
"அப்புறம்?"
"உன் விலாசத்தையும் உன் போனாவிஷன் நம்பரையும் அந்தப் பெண்ணிடன் பெயரோடு கொடுத்துவிட்டேன்."
"ஐயையோ!
"இனி உன் பெயர் கிறிஸ்டினா ஜான்டா. உனக்கும் எனக்கும் சர்க்காரிடமிருந்து கல்ணாயத்துக்கான அனுமதி கிடைத்துவிடும்"
"நான் எப்படி கிறிஸ்டினா ஜாண்டா ஆக முடியும்?"
"ஏன் முடியாது?" தலைமுடியை ப்ளீச் செய்து கொள். கண்ணுக்கு காண்டாக்ட் லென்ஸ் போடு. பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தோலில் உள்ள பிக்மெண்ட்களைத் திருத்தி வெள்ளைத் தோளாக மாற்று. கிறிஸ்டினா ஜாண்டா தயார்."
"எனக்கு பயமாக இருக்கிறது"
"இதில் பயப்பட ஒன்றும் இல்லை"
பத்து நாட்கட்ள கழிந்தன. சாயந்தரம் வேலையிலிருந்து களைப்புடட்ன தன் அபார்ட்மெண்டுக்குத் திரும்பிய அபியின் மேஜையின் மேல் ஒரு பேக்ஸ் செய்தி காத்திருந்தது.
"நல் வாழ்த்துக்கள்"
தங்களுக்கும் கீழ்க்காணும் பிரஜைக்கும் திருமண ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் மைத்ராவின் பெயரால் வழங்கப்படுகிறது.
பெயர் : கிறிஸ்டினா ஜாண்டா வயது : 24 தொழில் : அணு விஞ்ஞானி இருப்பிடம் : வார்சா, போலந்து
தற்போதைய விலாசம் : ஸ்ட்ராஸ்பர்க், பிரான்ஸ்
இன்னும் ஒரு வாரத்தில் மேற்படி பிரஜை தங்கள் இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
- ஐசக் துரானி. இயக்குநர் (மைத்ரர்வின் ஆணையின்படி)
சந்தோஷம் தாங்காமல் துள்ளிக் குதித்தான்.
அந்த வாரம் முழுவதும் போனோவிஷனில் இருவரும் மாறி மாறிப் பேசுவதே தொழிலாகிப் போனது. அவர்கள் அலுவலக வேலை கூட உப தொழிலாகிவிட்டது.
ஒன்பதாவது நாள், விடியற்காலை (0500) ஐந்து மணி இருக்கும். வாசலில் யாரோ வந்து அழைப்பு மணியை அழுத்தினார்கள்.
தூக்கக் கலக்கத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் அபி. ரிமோட் கண்ட்ரோல் ஸ்விட்சை அழுத்தினான். வாசலில் ஒரு வெள்ளைக்காரி நிற்பது திரையில் தெரிந்தது.
குழப்பத்துடன் வாசற்கதவைத் திறந்தான்.
இருபது வயசுக்குரிய முகமும் நாற்பது வயசுக்குரிய பொதுக் உடம்புமாய் ஒரு வெள்ளைக்காரி.
"நீங்கள்தானே மிஸ்டர் அபி...?"
"ஆமாம்... நீங்கள்?"
"ஆ!.. நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். இந்தியன்தானே? நீ எப்படி இருப்பாயோ என்று பயந்து கொண்டே வந்தேன். நல்ல வேளை தப்பித்தேன். உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது"
அபியின் வயிற்றில் அமிலம் சுரந்தது.
"நீங்கள் யாரென்று சொல்லவில்லையே?"
"நான் ஒரு முட்டாள். அவசரத்தில் என்னைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். என் பெயர் கிறிஸ்டினா ஜாண்டா... என்னை உனக்கு மனைவியாக்கி இருக்கிறார்கள்...."
சொல்லும்போதே அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது.
"நீ இறந்துவிட்டதாக அல்லவா சொன்னார்கள்?"
கெக்கெக்கே என்று அபஸ்வரமாகச் சிரித்தாள்.
"அதையேன் கேட்கிறாய்? பக்கத்து பிளாட்டில் கிறிஸ்டினா ஃபாண்டா என்று ஒருத்தி செத்துப் போய் விட்டாள். தவறுதலாக நான் தான் செத்துப் போய்விட்டேன் என்று நினைத்துவிட்டார்கள். நல்ல வேடிக்கை. நான் ஓர் இந்தியனைக் கட்டிக் கொண்டு பிள்ளை குட்டி பெற வேண்டும் என்பது என் விதி."
"அப்படியானால் சுஷா என்ன ஆனாள்?"
"சுஷாவா.. ஓ... ஓர் இந்தியப் பெண். அவள் ஒரு பைத்தியம். நான்தான் கிறிஸ்டினா ஜாண்டா என்று புலம்பிக் கொண்டிருந்தாள் பாவம்."
"அவளுக்கு என்ன ஆயிற்று?" திகிலுடன் கத்தினான் அபி.
"ஃபோர்ஜரி குற்றம் சாட்டி அவளை அணுக்கதிரியக்க அறையில் தள்ளி லேசர் கதிரைப் பாய்ச்சிக் கொன்றுவிட்டார்கள்."
"ஐயய்யோ!"
"அதுமட்டுமன்று. உயிருடன் இருக்கும் ஆளையே செத்துப் போன மாதிரி சொன்ன ஆளையும் அபிஸ் காராக்கிருகத்துக்கு அனுப்பிவிட்டார்கள். சுஷாவை கிறிஸ்டினா ஜாண்டாவாக ஆக்கிய தேசத்துரோகியையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்."
அபி முகத்தில் ரத்தமிழந்தான்.
"சரி, அந்தக் கண்றாவியெல்லாம் கிடக்கட்டும். இந்தா, என்னைக் கட்டி அணைத்துக் கொள். முத்தமிடு."
என்று கூறி அவனைக் கெட்டியாகப் பிடித்து அனைத்துக் கொண்டாள். அபி மூச்சுத் திணறினான். அவளை வெடுக்கென்று உதறினான்.
"என்ன ஆயிற்று உனக்கு? காளிதாசன். கம்பன் பிறந்த ஊர்க்காரனாயிற்றே. பெண்ணை வெறுக்கலாமா? என்னைத் தொடு. காளிதாசனைக் கூப்பிடு."