நாட்டில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்புகளுக்கு சினிமாதான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதை விஜய் சேதுபதி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் “சினிமாவை பார்த்து யாரும் கெட்டுப் போவதில்லை. காதல் பிரச்சனை தொடர்பாக நிகழும் கொலைகள், சினிமாவின் பாதிப்பிலிருந்துதான் நடக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் மனதில் ஏற்கனவே கெட்ட எண்ணங்கள் இருந்திருக்க வேண்டும்.
அதனால் தான் அவர்கள் கொலை செய்கிறார்களே தவிர, சினிமாவை பார்த்து யாரும் சீரழிவதில்லை. ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் சினிமாவை, சினிமாவாக மட்டுமே பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.