ஆபாச வீடியோவால் ஸ்தம்பித்துப் போனேன் - நடிகை ஆஷா சரத் பேட்டி

திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (18:06 IST)
பாபநாசம் படத்தின் மூலம் ஆஷா சரத் தமிழிலும் பிரபலம். கமலின் தூங்கா வனத்திலும் நடித்து வருகிறார். பாபநாசத்தில் நடித்த கதாபாத்திரத்தைப் போல நிஜத்திலும் கம்பீரமான பெண்மணி.
 

 

மார்பிங்கில் தனது படத்தை ஆபாச படமாக்கி வெளியிட்டவர்கள் பிடிபடும்வரை போராடிய ஆஷா சரத்தான் இப்போது இளம் நடிகைகளின் ரோல் மாடல். 
 
ஆபாச வீடியோ குறித்து அறிந்த போது எப்படி இருந்தது?
 
நான் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டேன். நான் திருமணம் ஆன பெண். 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதனால் எனக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. 
 
ஆபாச வீடியோவில் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதா?
 
அப்படி எதுவும் இல்லை. அந்த வீடியோவால் எனது வாழ்க்கை பாதிக்கப்பட வில்லை. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்.
 
எப்படி...?
 
சூட்டிங்கிற்காக நான் பல இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது .அப்போது ஓட்டல்களில் தங்கவேண்டியது வரும். அதுபோன்ற சூழ்நிலையில் நான் உடை மாற்றும்போது யாராவது ரகசியமாக காமிராவில் படம்பிடித்திருப்பார்களோ என்று எண்ணிப்பார்த்தேன். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். ஏனென்றால் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நாளில் நான் சொந்த ஊரில்தான் இருந்தேன்.
 
பொதுவாக நடிகைகள், ஆபாசப் படத்தில் இருப்பது தாங்களல்ல என்று உணர்ந்தால் அதை அப்படியே விட்டு விடுவதுதான் வழக்கம். நீங்கள் போலீஸுக்கு போனது ஏன்?
 
சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுத்தேன். மேலும் தொடர்ந்து அதை வலியுறுத்தி வந்தேன். இதனால் குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும் 20 வயது நிரம்பாதவர்கள். போலி பேஸ்புக் முகவரி மூலம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். 
 
ஏன் அவர்கள் அப்படி செய்தனர் என்று தெரியுமா?
 
அவர்களை விசாரித்த பிறகு, சமூக வலைதளங்களில் இதுபோன்ற படங்களை வெளியிட்டு அவர்கள் பணம் சம்பாதிப்பது தெரிய வந்தது. நான் எனக்காக மட்டும் போராடவில்லை.  
 
சமூக வலைத்தளங்களால் பேராபத்து என்கிறீர்களா?
 
நான் சமூக வலைதளங்களை குறை சொல்லவில்லை. 100 பேரில் சிலர் இப்படி செயல்படுவதால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. சமூகவலைதளங்களில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளது. நான் 21 வருடங்களாக துபாயில் வசித்து வருகிறேன். அங்கெல்லாம் இதுபோன்ற குற்றத்துக்கு பெரிய தண்டனைகள் வழங்கப்படுகிறது.
 
நம்மூரில் சட்டம் சரியில்லை என்கிறீர்களா?
 
சட்டத்தை நான் குறைகூறவில்லை. குற்ற செயல்கள் அதிகரிப்பதைதான் வேதனையுடன் கூறுகிறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்