இனம் அனாதைகளின் கதை - சந்தோஷ் சிவன்

செவ்வாய், 25 மார்ச் 2014 (13:26 IST)
மல்லி, டெரரிஸ்ட் என்று ஆரம்ப காலத்திலேயே சர்ச்சைக்குரிய பாதையில் சஞ்சரிக்க ஆரம்பித்தவர் சந்தோஷ் சிவன். அவரின் புதிய படைப்பு இனம். இலங்கை போர் பின்னணியில் அனாதைகளின் கதையைச் சொல்லும் படம். அதனாலேயே உலகத் தமிழர்கள் மத்தியில் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு. சென்சார் முடிந்து தயாராக இருக்கும் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது.
FILE

இனம் எப்படிப்பட்ட படம், அது உருவாவதற்கான விதை எங்கு கிடைத்தது என்பதைப் பற்றி சந்தோஷ் சிவனே கூறுகிறார்.

இந்தப் படம் எடுக்கணும் என்று எப்படி தோன்றியது?

இந்த ஃபிலிம் ஸ்டார்ட் பண்ணுறதுக்கு முன்னாடி லஞ்சுக்காக ஒரு ப்ரெண்டோட வீட்டுக்கு போன போது அவங்க சிலோன் ஃபுட் எல்லாம் ப்ரிப்பேர் பண்ணியிருந்தாங்க. யாரு இதை குக் பண்ணுனதுன்னு கேட்டேன். இலங்கையிலிருந்து வந்த ஒருத்தர்தான் அதை குக் பண்ணுனதா சொன்னாங்க.
FILE

அங்க ஒரு பெண் இருந்தாங்க. அந்த பெண் எதுவுமே சொல்லலை. ஆனா அவங்க கண்ணுல ஒரு ஸ்டோரி இருந்தது. அப்போதான் ஒரு அகதி அங்கேயிருந்து இங்க வந்து கஷ்டப்பட்டுறது பற்றி யோசிச்சேன். அந்த எண்ணம் மனசைவிட்டு போகவேயில்லை. அந்த எண்ணத்தோட பயணம்தான் இந்தப் படம்.

சிலோன், இனம்னு இரண்டு பெயர் வச்சிருக்கீங்க?

இரண்டு மொழிகளில் படம் வெளியாகுது.
FILE

சிலோன் என்ற பெயரில் இங்கிலீஸ்லயும், இனம் என்கிற பெயர்ல தமிழ்லயும் வெளியாகுது.

மல்லி மாதிரியான படமா?

மல்லி ஆக்சுவலி சில்ட்ரன்ஸ் ஃபிலிம். இது அப்படியில்லை.
FILE

ஒரே விதமான படமா எடுக்குறீங்களே. இந்த மாதிரி படம் எடுக்கதான் உங்களுக்கு விருப்பமா?

அசோகா, உருமி எல்லாம் பண்ணும் போது எல்லோருமே கேட்பாங்க நீங்க பீரியட் படம் மட்டும்தான் எடுப்பீங்களா? டெரரிஸ்ட் படம் எடுக்கும் போது டெரரிஸ்ட் பற்றி மட்டும்தான் எடுப்பீங்களா?
FILE

சில்ட்ரன்ஸ் ஃபிலிம் எடுக்கும் போது சில்ட்ரன்ஸ் ஃபிலிம் மட்டும்தான் எடுப்பீங்களான்னு எப்போதுமே கேள்வி வருது. அதனால எல்லா படமும் எடுப்பதற்கு எனக்கு பிடிக்கும்.

படத்தோட கதை எதை மையப்படுத்தியது?

இந்த ஸ்டோரி முக்கியமா போகஸ் பண்ணுறது ஒரு அனாதையோட கதை. ஒரு பிரச்சனையில் அவங்களுக்கு சொந்தங்கள் எல்லாம் போயாச்சு. அவங்க ஒரு ஆனாதை இல்லத்துக்கு போகும் போது அங்க உள்ளவங்க எல்லாம் சேர்ந்து ஒரு பேமியாகுறாங்க.
FILE

எங்கேயெல்லாம் படப்பிடிப்பு நடத்தது ?

மகாராஷ்ட்ரா, திருநெல்வேலி, ராமேஸ்வரம், கேரளா அப்புறம் கொஞ்சம் ஷாட்ஸ் இலங்கையில எடுத்திருக்கு.

திரையரங்கில் முதல்ல வெளிவருமா இல்லை திரைப்பட விழாவில் திரையிடுவீங்களா?

பெஸ்டிவெல்ல திரையிடுறதுக்கு நிறைய கேட்கிறாங்க. ஆனா இந்தப் படம் தமிழ் மக்களுக்கு, அவங்க இதுகூட ரிலேட் பண்றதுக்கு எடுத்தது. அதனால அவங்களுக்குதான் முதல்ல திரையிடணும்னு முடிவு பண்ணியிருக்கேன்.
FILE

இலங்கை யுத்த பின்னணி என்று வரும் போது நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வருமே?

ஒரு யுத்தம் காண்பிக்கும் போது இரண்டு பேரும் அவங்க சைடு ரைட்டுன்னு சொல்லிதான் பைட் பண்றாங்க. இந்த யுத்தத்துலதான் பர்ஸ்ட் டைம் போன் யூஸ் பண்ணியிருக்காங்க. ஆர்மியும் போன்ல ஷுட் பண்ணியிருக்காங்க, இவங்களும் ஷுட் பண்ணியிருக்காங்க. இதெல்லாம் எவிடென்ஸ் யூ டியூப்ல வரும்போது பிபிசி ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்திருக்கு. அதெல்லாம் நமக்கு எவிடென்ஸ். என்ன எதிர்ப்பு வந்தாலும் படத்துல சொல்லியிருக்கிறது எல்லோருக்குமே தெரியும்.

இது ஒரு அனாதையின் பார்வையில் சொல்லப்படும் கதைன்னு சொல்லலாமா?

ஒரு அனாதையின் கதையில்லை. ஒரு கூட்டம் அனாதைகளின் கதை. எல்லாமே கனெக்டட்தான். தனித்தனியா பார்க்க முடியாது.
FILE

படத்தைப் பார்த்தவங்க... குறிப்பா லிங்குசாமியின் கருத்து?

இந்த மாதிரி ஒரு படம் பண்ணும் போது நல்ல ஒரு டீம் இருக்கணும். டீம்தான் முக்கியம், பைனான்ஸுக்கு அப்புறம். படம் பார்த்த சென்சார் போர்ட் மெம்பர்ஸ் உள்பட எல்லோருமே அப்ரிசியேட் பண்ணுனாங்க. அதுல முக்கியமான அப்ரிசியேஷன் லிங்குசாமி சார் படத்தைப் பார்த்திட்டு நாமதான் டிஸ்ட்ரிபூட் பண்ணப் போறேம்னு சொன்னது. நான் ரொம்ப ஹேப்பி. படம் பண்றதுல ஒரு ஜர்னி இருக்கு. படத்தை டிஸ்ட்ரிபூட் பண்றது அப்படியில்லை. எல்லா இடத்துக்கும் கொண்டு சேர்க்கணும், காசு வேணும்... அது பெரிய விஷயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்