இறுதி கட்ட போரில் இலங்கை ராணுவம் போர்க்குற்றம்: அம்பலத்திற்கு வந்த உண்மை

வியாழன், 22 அக்டோபர் 2015 (04:34 IST)
இலங்கையில் இறுதி கட்ட போரின் போது ராணுவம் போர்க்குற்றம் செய்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
 

 
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகள் தரப்புக்கும் இடையே நடைபெற்ற இறுதிக் கட்டப்போரின் போது அந்நாட்டு ராணுவத்தினர் போர் விதிமுறைகளை நடந்து கொண்டனர்.
 
அப்போது முதலே இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக பல்வேறு மனிதஉரிமை அப்புகளும், தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தோடு, இலங்கை மீது ஐ.நா. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகுரல் கொடுத்தனர். மேலும், இந்த கோரிக்கைய வலியுறுத்தி பல்வேறு கட்டப்போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
 
இந்த நிலையில், சர்வதேச நெருக்கடியை அடுத்து இறுதிக்கட்ட போர் குறித்து விசாரணை நடத்த அப்போதையை ராஜபக்சே அரசு ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமா தலைமையில்  விசாரணைக்குழு அமைத்தது.
 
அந்தக்குழு தனது 178 பக்க அறிக்கையை சமீபத்தில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனாவிடம் ஒப்படைத்தது. அதில், இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மையே என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், இலங்கை போர்க் குற்றம் குறித்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறவேண்டும் என்ற ஐ.ந.வின் பரிந்துரையையும் ஏற்கவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்