இலங்கையின் பல இடங்களில் நீர்த்தேக்கங்கள் திறப்பு

ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (07:28 IST)
இலங்கையில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்த் தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலநறுவ மாவட்டத்தில் பராக்கிரம சமுத்திரம், அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்கா சமுத்திரம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெரிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் திறந்துவிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் இடர் முகாமைத்துவ மையம் கூறுகின்றது.

நீர்த் தேக்கங்களும் குளங்களும் திறந்து விடப்பட்டுள்ளதால் அதற்கு அருகாமையில் வாழும் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையத்தின் துனை இயக்குநர் பிரதீப் கொடிப்புலி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நீர்த்தேக்கங்களும் குளங்களும் திற்ந்து விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சாலைகளும் வீதிகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

மட்டக்களப்பு-பொலநறுவை நெடுஞ்சாலையில் மன்னம்பிட்டிய மற்றும் கல்லல ஆகிய இடங்களிலும், மன்னார்-புத்தளம் சாலையில் எழுவான்குளத்திலும் இப்படியான நிலை காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.

புத்தளம், மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாதுப்புகள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அறிக்கை பதிவாகியுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் குறிப்பிடுகின்ன.

வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மழையுடன் கூடிய கால நிலை நீடிக்கும் என் தெரிவிக்கப்படுகின்து.

வெப்துனியாவைப் படிக்கவும்